1995 ஆம் ஆண்டு பாட்ஷா ரிலீசான போது, அதன் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் அது பரபரப்பை ஏற்படுத்தயது. ரஜினியின் ஸ்டைலும் அவர் பேசிய பன்ச் வசனமும் (நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி!) ரசிகர்களிடம் பலத்த வரவேற்ப்பை பெற்று, சூப்பர் ஸ்டாரை எங்கோ கொண்டு சென்றது.
உடனடியாக அதை ஹிந்தியில் வெளியிட விரும்பி அதன் ரீமேக் உரிமைகள் அபாரமாக விற்பனையாகின. அமிதாப் பச்சான் அதில் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தை பார்த்த அமிதாப், “ரஜினி பின்னி பெடலெடுத்திருக்கிறார். அவர் போல நிச்சயம் என்னால் செய்யமுடியாது” என்று நடிக்க மறுத்துவிட்டார். தனது ஏ.பி.சி.எல். நிறுவனம் சார்பாக அதை உடனடியாக டப் செய்து வெளியிட்டார். அது நிறைய பேருக்கு தெரியாது.
இந்நிலையில், அதன் ரீமேக் மற்றும் ஹிந்தி வெளியீட்டு உரிமையை வைத்திருக்கும் பத்ரகாளி வர பிரசாத் ராவ் அதை கிராபிக்ஸ் மூலம் கலர்புல் ஆக்கி விரைவில் வெளியிட இருக்கிறார். இது குறித்து பிரசாத் ராவ் கூறுகையில், “தமிழில் பாட்ஷா ரிலீசாகி வெற்றி பெற்ற சூட்டோடு, அமிதாப்ஜியை வைத்து ஹிந்தியில் இதை நான் வெளியிட நினைத்தது உண்மைதான். ஆனால்; அமிதாப் அதற்க்கு பிறகு தீவிர அரசியலில் குதித்தால், அதை வெளியிட முடியவில்லை. ஹிந்தில் ‘எந்திரன்’ என்ற பெயரில் ரிலீசாவதற்கு முன்பே, பாட்ஷாவின் ஹிந்தி உரிமை மற்றும் டப்பிங் ரைட்ஸை நான் வாங்கி வைத்திருந்தேன். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் ரஜினிக்கு மார்க்கெட் அபாரமாக இருக்கிறது. எனவே பாட்ஷாவை ரிலீஸ் செய்ய இது தான் சரியான தருணம்.”
படத்தை கலர் கரக் ஷன் செய்வதற்கு பெரிய தொகையை செலவிட்டிருக்கிறார் பிரசாத் ராவ். “Colour Restoration மற்றும் DI Correction என்று சொல்லப்படும் இரண்டையும் செய்திருக்கிறேன். இடையிடையே வரும் பிளாஷ் பேக் நெகடிவ் காட்சிகளை மாற்றி புதிய முறையில் அமைத்திருக்கிறேன். டைட்டில் கிராப்க்ஸை புதிதாக செய்திருக்கிறேன். (ஒரிஜினல் படத்திலேயே இவையெல்லாம் பிரமாதாமாக இருக்கும். அதை மேலும் மேருகேற்றியிருக்கிறார்கள் என்றால், எப்படி இருக்கும்? வாவ்!) தவிர ஒரிஜினல்; மோனோ சவுன்ட்டில் வெளியானது. ஆனால் தற்போது ஸ்டீரியோ இசையில் 5.1 சானலில் இசை புதிதாக கோர்க்கப்பட்டுள்ளது. ஒரிஜினல் படத்திற்கு இசையமைத்த தேவா, ஹிந்திக்கும் பின்னணி இசை சேர்த்திருக்கிறார். ஆடியன்சுக்கு படத்தை புதிதாக பார்ப்பது போல இருக்கும்.” என்று கூறுகிறார் பிரசாத் ராவ்.
அவர் மேலும் கூறியதாவது, மே முதல் வாரத்தில் ஹிந்தி பதிப்பின் இசை வெளியீடு நடைபெறும் எனவும், இதை வெளியிட சூப்பர் ஸ்டாரை அனுகப்போவதாகவும் கூறுகிறார். படம் மே இறுதியில் உலகம் முழுதும் வெளியாகும் எனவும் கூறும் பிரசாத் ராவ், தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியிட தயாராக இருப்பதாகவும் ஆனால் ரீமேக் உரிமைகள் தம்மிடம் இல்லை எனவும் அதை பெற முயற்சித்து வருவதாகவும் கூறுகிறார் பிரசாத் ராவ்.
(தயாரிப்பாளர் நொந்து நூலான வேற சிலரோட படங்களையும் இதே மாதிரி நாங்க வெளியிடப்போறோம்னு பில்டப் கொடுப்பானுங்களே… என்ன செய்ய…)