ஏ.வி.எம். ஸ்டூடியோவில் எட்டாவது தளத்தில் படத்திற்கான பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. படக் குழுவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்துமீறி பிரவேசிப்பதை தவிர்க்க, யூனிட்டார் அனைவருக்கும் “Access Card” வழங்கப்பட்டுள்ளது. அந்த கார்டை காட்டினால் தான் அந்த தளத்திற்குள் செல்லமுடியும். மிகவும் பிரம்மாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த செட்டில் தான் படப்பிடிப்பு துவங்குக்கிறது.
படத்தின் மூன்று நாயகிகளும் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள். தீபிகா இளைய ரஜினிக்கு ஜோடியாகவும், இரண்டாம் ரஜினிக்கு இலியானாவும், மூத்த ரஜினிக்கு ஜோடியாக தபுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார்கள் என இன்றைய டெக்கான் குரோனிக்கில் நாளிதழ் கூறுகிறது. படத்தின் பூஜை ஏ.வி.எம்.மில் உள்ள பிள்ளையார் கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெறும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment